Sunday, July 19, 2009

கார்த்திகை பாண்டியன் (ஜீக்கு) ஒரு ஒ போடுங்கள்

நானும் கார்த்திகை பாண்டியனும் (ஜி) இருவரும் ஏற்கனேவே நண்பர்கள் தான் இருந்தாலும், ஒரு பிளாக்இல் இணைவதற்கு முன் அவரிடம் ஒரு பாராட்டு. கார்த்திகை பாண்டியனின் பிளாக் பற்றி சென்ற வாரம் கல்கி இதழில் வெளியானது நம் பிளாக் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.

நான் ஏன் கார்த்திகை பாண்டியனை (ஜி) என்று கூற வேண்டும், எனது வாரிசு வேலை நண்பர் மதனகோபால் ஒரு தீவிர அஜித் ரசிகர். இவர்கள் இருவரும் பேசிய போது தன் தெரிந்தது கார்த்தியும் ஒரு அஜித் ரசிகர் என்று.

முதலில் நானும் நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறேன்.

நானும் பிளாக் எழுதுவதுற்கு கார்த்திகை பாண்டியனின் எழுத்துக்கள் தான் காரணமாக இருந்தது, கார்த்திகை பாண்டியன் எனது நீண்ட நாள் நண்பர் அசோக் மூலம் எனக்கும் நண்பர் ஆனார்.

கார்த்திகை பாண்டியன் அனைத்து துறைகளையும் நன்கு படித்து தெரிந்து வைத்திருப்பார். இவர் மட்டும் எப்படி இத்தனை வித்தியாசமாக எல்லா துறைகளையும் பற்றி எழுதுகிறார் என்று அசோகிடம் கேட்ட போதுதான் இவரை பற்றி தெரிய முடிந்தது.

இவர் நம்மை போல் ஒரு நாளிதழை எடுத்தால் ஒரு புரட்டு புரட்டிவிட்டு வைக்க மாட்டார். அதை முழுதும் படித்து விட்டு தான் வைப்பாரம். எனக்கும் பிளாக் எழுதுவதற்கு கார்த்திகை பாண்டியனின் பிளாக் வழிகாட்டி கை கொடுத்து.

நண்பர்கள் எவ்வளவு பக்கமாகவும், தூரமாகவும் இருந்தாலும் அவர்களின் எழுத்துக்களை பிளாக்இல் படித்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயமாகும். ஏனென்றால் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது....

மனதில் நினைப்பதுதான் வாயில் வரும் என்பார்கள் அதை எழுத்திலும் காண முடியும் என்பதை பிளாக் நிறைவு செய்திருக்கிறது.

மீண்டும் வேறு எதாவது தலைப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.

நன்றி
பாலாஜி. கா

1 comment:

  1. வாழ்த்துகள் பாலாஜி.. என்னைப் பற்றி சொன்னதற்கு நன்றி.. உங்கள் பதிவு நிறைய பேரை சென்றடைய வேண்டுமானால் திரட்டிகளில் இணைக்க வேண்டும்.. நேரம் கிடைக்கும் போது போன் செய்யுங்கள்.. சொல்கிறேன்..

    ReplyDelete