Sunday, July 19, 2009

கார்த்திகை பாண்டியன் (ஜீக்கு) ஒரு ஒ போடுங்கள்

நானும் கார்த்திகை பாண்டியனும் (ஜி) இருவரும் ஏற்கனேவே நண்பர்கள் தான் இருந்தாலும், ஒரு பிளாக்இல் இணைவதற்கு முன் அவரிடம் ஒரு பாராட்டு. கார்த்திகை பாண்டியனின் பிளாக் பற்றி சென்ற வாரம் கல்கி இதழில் வெளியானது நம் பிளாக் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.

நான் ஏன் கார்த்திகை பாண்டியனை (ஜி) என்று கூற வேண்டும், எனது வாரிசு வேலை நண்பர் மதனகோபால் ஒரு தீவிர அஜித் ரசிகர். இவர்கள் இருவரும் பேசிய போது தன் தெரிந்தது கார்த்தியும் ஒரு அஜித் ரசிகர் என்று.

முதலில் நானும் நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறேன்.

நானும் பிளாக் எழுதுவதுற்கு கார்த்திகை பாண்டியனின் எழுத்துக்கள் தான் காரணமாக இருந்தது, கார்த்திகை பாண்டியன் எனது நீண்ட நாள் நண்பர் அசோக் மூலம் எனக்கும் நண்பர் ஆனார்.

கார்த்திகை பாண்டியன் அனைத்து துறைகளையும் நன்கு படித்து தெரிந்து வைத்திருப்பார். இவர் மட்டும் எப்படி இத்தனை வித்தியாசமாக எல்லா துறைகளையும் பற்றி எழுதுகிறார் என்று அசோகிடம் கேட்ட போதுதான் இவரை பற்றி தெரிய முடிந்தது.

இவர் நம்மை போல் ஒரு நாளிதழை எடுத்தால் ஒரு புரட்டு புரட்டிவிட்டு வைக்க மாட்டார். அதை முழுதும் படித்து விட்டு தான் வைப்பாரம். எனக்கும் பிளாக் எழுதுவதற்கு கார்த்திகை பாண்டியனின் பிளாக் வழிகாட்டி கை கொடுத்து.

நண்பர்கள் எவ்வளவு பக்கமாகவும், தூரமாகவும் இருந்தாலும் அவர்களின் எழுத்துக்களை பிளாக்இல் படித்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயமாகும். ஏனென்றால் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது....

மனதில் நினைப்பதுதான் வாயில் வரும் என்பார்கள் அதை எழுத்திலும் காண முடியும் என்பதை பிளாக் நிறைவு செய்திருக்கிறது.

மீண்டும் வேறு எதாவது தலைப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.

நன்றி
பாலாஜி. கா

Saturday, July 18, 2009

வாரிசு வேலை

நானும் எனது நண்பன் மதனகோபால் இருவரும் வாரிசு வேலைக்காக அலைந்து கொண்டு தன் இருக்கிறோம்.

எனது தந்தை பி எஸ் என் எல் வேலை பார்த்து வந்தார், மதன் தந்தை ஆசிரியராக பணியாற்றி vanthar

இந்த வாரிசு வேலை என்பது ஒரு சாதரணமான விஷயம் என்று நினைத்தான் மதன் ஆனால் அவனோ பத்து வருடங்களாக அலை மோதுகிறான்.

இதை நான் ஏன் எனது பிளாக் கில் வெளியிட வேண்டும்! நண்பர்கள் மூலம் எதாவது லிங்க் கிடைக்கும் என்றுதான்.

மதன் தனது அனைத்து சான்றிதல்களையும் அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டான். இப்போது அவனால் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் இருக்கிறான்.

நண்பர்கள் அனைவரும் இதன் மூலம் உஷாராக இருக்க இதன் மூலம் அறிவுருதபடுகிரர்கள். மதனுக்கு நடந்த இந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க மதனுக்கு seekiramaka வேலை kidaikuma .........!

மீண்டும் santhipom.





Wednesday, July 15, 2009

Introduction

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

இன்று நான் புதிதாக ஒரு ப்ளாக் துவங்குகிறேன், இந்த ப்லாக் நண்பர்களுடன் என் நட்பை தொடர உதவியாக இருக்கும். நண்பர்கள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, நானும் அதே எண்ணங்களோடு தான் துவங்குகிறேன்.

என்னை பற்றி என் நண்பர்களுக்கு தெரியும் மற்றவர்களுக்காக ஒரு அறிமுகம் என் பெயர் பாலாஜி நான் கோவை மாவட்டம் உடுமலைபேட்டை நகரில் இருக்கிறேன், என் தந்தை காந்தி, 2006 வருடம் காலமாகிவிட்டார், அம்மா கிருஷ்ணவேணி அரசு பள்ளியில் பணியாற்றுகிறார்.

நான் எனது நகரிலேயே இன்டர்நெட் மையம் மற்றும் சிஃபி (சத்யம்) இன்டர்நெட் நடத்தி வருகிறேன். நான் கடந்த 2003 வருடம் முதல் நடத்தி வருகிறேன், ஆரம்பம் முதல் இன்று வரை நண்பர்கள் எனக்கும் எனது நிறுவனத்துக்கும் முன்னேற்றத்திற்கும் உதவியாக இன்றும் இருக்கிறார்கள்.

நாளை முதல் எனது சுவையான அனுபவங்களையும் மாற்ற விமர்சனங்களையும், நகைசுவைகலையும் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து இருங்கள்.

நன்றி
பாலாஜி. கா